மன்னை ராஜகோபாலசுவாமி கோவில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது

84பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பத்து நாள் ஊஞ்சல் உற்சவம் இன்று முதல் தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி திருக்கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும் இக்கோவிலில் 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழா இன்று தொடங்கியது. ருக்மணி சத்தியபாமா உடன் ராஜகோபாலசுவாமி கல்யாண திருக்கோளத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக சுவாமிக்கு அடுக்கு ஆரத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பத்து நாள் ஊஞ்சல் உற்சவத்தில் ஏழாம் நாளில் சேர்த்து ஏக சிம்மாசனம் எனும் விழா நடைபெற உள்ளது இதில் ருக்மணி சத்தியபாமா செங்கமலத் தாயார் உடன் ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி