மன்னார்குடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மழை

73பார்த்தது
மன்னார்குடியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதுடன் தற்போது மழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. திடீர் மழையால் பாதசாரிகளும் நடைபாதை வியாபாரிகளும் அவதிக்குள்ளாயினர் மன்னார்குடி நீடாமங்கலம் சவளக்காரன் பாமணி காரிகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி