மன்னார்குடியில் தவெக சார்பில் திமுகவை கண்டித்து போராட்டம்

71பார்த்தது
மகளிர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி தேரடியில் திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை கொடுப்பது பெண் பாதுகாப்பு என கூற முடியாது. தமிழகம் முழுவதும் கல்வி கூடங்களிலும் மாணவர்களுக்கு பாலியல் கொடுமைகள் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்தவில்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை முதல்வராக்க வேண்டும் என பெண்கள் உறுதி ஏற்க வேண்டும் என பேசினார்.

தொடர்புடைய செய்தி