மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 7ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் விக்டோரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் அம்புரோஸ் மேரி முன்னிலை வகித்தார். மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் கரிகால் சோழன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார்.
கிங்ஸ், ராக்கர்ஸ், வாரியர்ஸ், ஸ்டார்ஸ், என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு இசையுடன் கூடிய நடன விளையாட்டுபோட்டிகள் தொடங்கின. கபடி, கோகோ, கைப்பந்து, ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், கராத்தே என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கல்லூரி விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராக்கர்ஸ் ani தட்டிச் சென்றனர். திருச்சி மாவட்ட சுங்க கண்காணிப்பாரும் இந்திய சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரருமான ஸ்ரீராம், மற்றும் பல்வேறு துறை சார்ந்த சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.