மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. ஒழுங்கமைக்கப்பட்ட நிலையான வணிகம் மற்றும் நிர்வாகத்தில் வளர்ந்து வரும் போக்கு எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் விக்டோரியா தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அம்ரோஸ்மேரி முன்னிலை வகித்தார். வணிக மேலாண்மையியல் துறை தலைவர் ஞானலட்சுமி வரவேற்றார். முனைவர் பாலமுருகன் தொடக்க உரையாற்றினார். சீன பிரிட்டிஷ் கல்லூரி கணக்கியல் மற்றும் நிதி இயல்பீடம் மற்றும் யுனிவர்சி குவாங்கி மிஞ்சு பல்கலைக்கழகம், ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன் நானிங், பிஆர். சீனாவுடன் கூட்டு திட்ட முனைவர் ஜெயராஜ், சிறப்புரை வழங்கினார். வித்யாலங்கர் ஸ்கூல் ஆப் இன்ஃபர்மேஷன்டெக்னாலஜி, வடலா ஈஸ்ட் மும்பையின் மேலாண்மை ஆய்வுத்துறை தலைவர் லீனாநாயர் கருத்துறை வழங்கினார். தஞ்சை சரபோஜி கல்லூரி வணிக நிர்வாக ஆராய்ச்சி துறை தலைவர் முனைவர் சுரேஷ் கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரியின் வணிகவியல் தலைவர் முனைவர் வேம்பு, நாகப்பட்டினம் ஈஜிஎஸ் கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் முனைவர் கார்த்திக் சிறப்புரையாற்றினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்று தங்களது கட்டுரைகளை சமர்பித்தனர். நிறைவாக வணிகவியல் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிருந்தா நன்றி கூறினார்.