மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

80பார்த்தது
மன்னார்குடி அக்கரை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ பாலம் பகுதியில் அக்கரை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு 79வது ஆண்டாக தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று(செப்.8) இரவு நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் செடியில் காவடி பால் குடங்கள் எடுத்து மன்னார்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வாசலில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக் கடை செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி