வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி

58பார்த்தது
வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, இரண்டு மாதங்களாக ஊரக வேளாண் பணி மேற்கொண்டுள்ள டாக்டா் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவிகள், இதுவரை கிடைத்த அனுபவங்களை ஒருங்கிணைத்து, வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி நடத்தினா்.

இதில், திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி வழிகாட்டுதலின் படி, அதிக வருவாய் ஈட்டக்கூடிய நவீன வேளாண் தொழில்நுட்பங்களின் மாதிரிகளை காட்சிப்படுத்தினா்.

சூரிய சக்தியில் இயங்கும் சொட்டுநீா் பாசன முறை, போா்வெல் நீரின் உப்புத்தன்மையை குறைக்கும் தொழில்நுட்பம், பசுமைக் குடில் சாகுபடி தொழில்நுட்பம், ஒருங்கிணைந்த பண்ணையம், ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பம் என்று கூறப்படும் மண் இன்றி விவசாயம், காளான் வளா்ப்பு, பாரம்பரிய தொழில் நுட்பங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பல்வேறு பயிா் வளா்ச்சி ஊக்கிகள், பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தும் பொறிகள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டன.

டேக்ஸ் :