மலம் கழிப்பதை சிறிது நேரம் அடக்கும்போது அந்த உந்துதல் தற்காலிகமாக நீங்கிவிடும். ஆனால், நீண்ட நேரத்திற்கு மலத்தை அடக்குவது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலத்தை வெகுநேரம் அடக்கினால் மலச்சிக்கல், வயிற்று வலி, வயிறு உப்புவது, வாயுத் தொல்லை, மெதுவாக மலம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதே போல உணவு உண்டபின் குறைவான நேரத்தில் மலம் கழிப்பதும் குடல் சார்ந்த கேடுகளுக்கு வழிவகுக்கிறது.