ஃபெஞ்சல் புயல் காரணமாக, இன்று (நவ.30) இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.