எம் பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

67பார்த்தது
பூந்தமல்லி அருகே திருவேற்காடு கூவ மாற்று அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் திருவள்ளுர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இந்த குடியிருப்பு பகுதியை நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து எம். பி. சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில்: வெள்ள பாதிப்பு வந்தால் நாமே அதை எடுத்து விடலாம் ஆனால் அது போன்ற எந்த பாதிப்பும் இங்கு இல்லை, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை தேவையில்லாமல் அனுப்புவது சரி இல்லை, இந்த நிலம் எடுப்பு என்பது தேவையில்லாதது என முதல்வரிடம் தெரிவிப்போம், அதனை அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது மக்களுக்கும் அரசின் சார்பில் வாக்குறுதியை அளிக்கிறேன், எல்லா வலியையும் தாங்கக்கூடிய மக்கள் தலித் மக்கள் தான், கூவம் நதியில் எல்லா இடத்தையும் விட இங்கு தான் பரப்பளவு அதிகமாக உள்ளது. ஆளுநரை முழுமையாக எதிர்ப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்து வந்த நிலையில் திடீரென எம்பி வீட்டில் என்ன சமையல் என கேட்ட நிலையில் அங்கிருந்த பெண்கள் அவரை வீட்டிற்கு சாப்பிட அழைத்தனர் அவர் பணிகளை முடித்துவிட்டு சாப்பிடுவதாக கூறிய நிலையில் திடீரென பெண் ஒருவர் நீங்கள் வருகிறீர்கள் என்பதால் வீட்டில் சமையல் ஏதும் செய்யவில்லை எனக் கூறியதால் அங்கு சிரிப்பளை எழுந்தது

தொடர்புடைய செய்தி