திருவொற்றியூரில் உள்ள தனியார் (விக்டரி) பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 35 மாணவிகள் மயக்கமடைந்தனர். உடனடியாக மீதமிருந்த மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர் குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேசிய மீட்புக் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு தற்போது வாயுக் கசிவு ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சென்னை திருவொற்றியூரில் இன்று வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு நாளை(அக்.26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.