திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஒயிட் கோட் செர்மனி2024 இன்று மருத்துவகல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையேற்று குத்து விளக்கேற்றி விழாவில் சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய ஆட்சியர் பிரபு சங்கர் மருத்துவ பயல தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்துவிட்டு வந்துள்ள மாணவர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் அவர்களுக்கு ஓர் ஆண்டில் வந்துவிட்டால் மற்ற மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு உயர்ந்து விடுவார்கள் எனவும் மருத்துவம் பயிலும் அளவிற்கு தங்களது பிள்ளைகளை உயர்த்திய அனைத்து பெற்றோர்களுக்கும் பாராட்டி நன்றி தெரிவித்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ளதால. ராக்கிங் போன்ற பிரச்சனைகள் எழாது என்றும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற கல்லூரி இது என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பி. கனகவள்ளி துணைமுதல்வர் மருத்துவர் திலகவதி மருத்துவமனை கண்கணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு மருத்துவ மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.