மூதாட்டியின் நலத்தை மீட்டுத்தரக்கோரி கோரிக்கை

84பார்த்தது
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு புங்கத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் பாளையம் (வயது 89) என்ற மூதாட்டி. இவர் அப்பகுதியில் 29/2A என்ற சர்வே எண் கொண்ட கிராம நத்தம் நில வகைப்பாட்டில் குடிசை வீடு கட்டி தனது மகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் பூர்விகமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் வசிக்கும் வீட்டிற்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இந்நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் தற்போது மூதாட்டியின் குடிசை வீட்டின் அருகே அரசுக்கு சொந்தமான காலி நிலமாக
7, கோடி மதிப்புள்ள 12, 500 சதுர அடி கொண்ட காலி நிலத்தை மட்டுமின்றி மூதாட்டி வசித்து வந்த குடிசை வீட்டின் நிலத்தையும் சேர்த்து ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணராவ்என்பவருக்கம் திருவள்ளூரில் அமைந்துள்ள பிரீத்தி மெடிக்கல் உரிமையாளர் அசோக் உள்ளிட்ட இரண்டு நபர்களுக்கும் சட்ட விரோதமாக திருவள்ளூர் மாவட்டவருவாய்த்துறையர் பட்டா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது

. மூதாட்டிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி