மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி . பொங்கல் திருநாளை முன்னிட்டு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஒன்றரை ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து அறுவடை செய்த போது ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லாபம் கிடைத்தாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கும் அதேபோல் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.