பெரியார் சொன்ன கருத்துகள் அனைத்தும் உண்மை தான். இருப்பினும், அந்த காலம் கடந்து விட்டது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "1968ல் முரசொலியில் பெரியார் பற்றி தீட்டிய கார்டூன் மிகவும் மோசமாக இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. சீமான் சொன்ன கருத்துகள் உண்மைதான். ஆனால், நாங்கள் அதை பேச விரும்பவில்லை" என்று பேட்டியளித்துள்ளார்.