திருத்தணி முருகன் கோயிலில் பிரபல இசை வாத்தியம் டிரம்ஸ் வாசிப்பாளர் டிரம்ஸ் சிவமணி சாமி தரிசனம் செய்தார். திருத்தணி -பிப்ரவரி-20 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் டிரம்ஸ் இசை வாத்தியம் வாசிக்கும் பிரபல டிரம்ஸ் சிவமணி மலேசியாவில் இருந்து வந்த தனது நண்பர் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார் அவருக்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் திருக்கோயிலில் ராஜகோபுரத்தை புகைப்படம் எடுத்து மகிழ்ந்து கொண்டார் ட்ரம்ஸ் சிவமணி. அவருடன் திருக்கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், பெண் பக்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.