திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கி உள்ளன, இதனால் அணை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. கரையிலும் குவியல் குவியலாக மீன்கள் இறந்து கிடக்கின்றன.
இறந்து கிடக்கும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் மூலமாக அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணா நதி நீர், மழைநீர் வந்து நீர் இருப்பு அதிகமானால் மட்டுமே இறந்து போவது குறையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்