மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது என திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? என கேள்வியெழுப்பியுள்ளார்.