திருத்தணி நகராட்சி இயற்கை உரம் தயாரித்து ரூ. 20க்கு விற்பனை

65பார்த்தது
திருத்தணி நகராட்சி இயற்கை உரம் தயாரித்து ரூ. 20க்கு விற்பனை
குப்பையில் இருந்து, 'பசுமை உரக்குடில்' என்ற உரம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் பசுமை உரம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் நேற்று முதல் திருத்தணி நகராட்சியில் அமல்படுத்தியுள்ளன. இதனால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளை உள்ளடக்கி 12. 42 சதுர கி. மீ. , பரப்பில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 44 ஆயிரத்து, 781 பேர் உள்ளனர்.

மேலும் நகராட்சியில், 13 ஆயிரத்து, 41 வீடுகள் உள்ளன. இது தவிர, திருத்தணி நகருக்கு தினமும், 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் நகராட்சியில் ஒரு நாளைக்கு, 17 டன் குப்பை சேருகிறது.

இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள், 40 பேரும், தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள், 110 பேர் என மொத்தம், 150 பேர், 21 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்கா குப்பைகள் தனித்தனியாக பிரித்து சேகரிக்கின்றனர்.

தினமும் 9 டன் மக்கும் குப்பையும், 8 டன் மக்கா குப்பையும் சேகரிக்கப்படுகிறது.

திடக்கழிவு மேலாண் மை விதி, 2016ல் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி மட்கும் மற்றும் மட்கா திடக்கழிவுகள் தரம் பிரிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி