தமிழகத்தில் சமீப நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 30) 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.