மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

73பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும்
இந்த திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டது தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து
உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வெள்ளி கலசத்தில் எழுந்துருளி கொடி மரத்திற்கு எதிரே எழுந்தருளினார் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு
புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றுதல் தொடங்கியது
இதனைத் தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான் திருக்கோயில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
இந்த மாசி பிரம்ம உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் மாலை மற்றும் காலை ஆகிய இரு வேலைகளிலும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளிப்பார்
நிகழ்ச்சியில் எட்டாம் நாள் மார்ச் 10ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மலைப்பகுதியில் திருக்கல்யாணம் உற்சவர் முருகப்பெருமானுக்கும் வள்ளியம்மை தாயாருக்கும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி