காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

547பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் நள்ளிரவு ஒரு மணிக்கு கந்தன் நகர் எதிரில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் இருந்த நாகமரம் திடீரென்று வீசிய சூறைக்காற்று காரணமாக இதனால் நாகமரம் முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் விழுந்து

இதனால் உடைந்து போன மின் கம்பம் சாலையில் விழுந்த நாகமரம்

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து

போலீசாரும் மின்சாரத் துறை அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் இணைந்து சாலையில் விழுந்த நாகமரத்தை இரண்டு மணி நேரம் போராடி அகற்றினார்கள்

மேலும் உடைந்து போன மின்கம்பத்தை சாலையிலிருந்து அகற்றி இந்த பகுதிக்கு மின்சாரம் நள்ளிரவில் வழங்குவதற்கு 3- மணி நேரம் ஆனது

இதனால் கந்தன் நகர், பூங்கா நகர், முல்லைத் தெரு போன்ற பகுதிகளில் வசிக்கின்ற 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நள்ளிரவில், மின்சாரம் இல்லாமல், கொசுக்கடி, கடுமையான வெப்பம், இதனால் கடும் அவதி அடைந்தனர்

தொடர்புடைய செய்தி