திருத்தணி அருகே சாராயம் கடத்தியவர் கைது.

62பார்த்தது
திருத்தணி அருகே சாராயம் கடத்தியவர் கைது.
ஆர். கே. பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான நல்லாட்டூர் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது வாகனத்தில், 20 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததையும், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து நல்லாட்டூர் பகுதியில் விற்பனை செய்வதற்கு கொண்டு வந்ததும் தெரிந்தது.

சாராயம் கடத்தி வந்த நல்லாட்டூர் அங்கன்வாடி தெருவை சேர்ந்த ராஜேஷ், 30 என்பவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :