திருத்தணி பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை

53பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, திருவாலாங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர். கே. பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 7 மணி முதல் திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்போர் அவதி அடைந்தனர். திருத்தணியில்  ம. பொ‌சி. சாலை, பழைய பஜார் தெரு, மருத்துவமனை சாலை, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் சாலைகளில்தேங்கி நின்றதால் அவ்வழியாக வாகன சேவை பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை மற்றும். ஆர் கே பேட்டை பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை திருவாலங்காட்டில் அதிகபட்சமாக 113 மி. மீ,  திருத்தணியில் 56 மி. மீ, ஆர். கே. பேட்டையில் 12 மி. மீ, பள்ளிப்பட்டு 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி