திருத்தணி முருகர் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 94 லட்சம்

598பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறப்பு பெற்றதாகும். இக் கோயிலுக்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனாக கோயில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் செலுத்துகின்றனர்.   திருக்கோயில் சார்பில் மாதம் ஒருமுறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம், கடந்த 27 நாட்களின் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இந்து அறநிலைத் துறை  காஞ்சிபபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி,   திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் மேற்பார்வையில்  உண்டியல்கள் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்ப்பட்ட கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.   இதில்  ரூ. 94 லட்சம் 45 ஆயிரம் 487 ரூபாய் ரொக்கம், 416 கிராம் தங்கம்,   7045 கிராம் வெள்ளி பக்தர்கள்  காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

முருகர் கோயில் உண்டியலில் ஜப்பான் நாட்டு  நாணயம்

முருகன் கோயில் உண்டியல் காணிக்கை  எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி