பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்

77பார்த்தது
பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்
விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அர்ஜூனன், பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற டிரைவர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக கண்டக்டர் தேவராசுவை பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி