திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளை வழங்குவதை கைவிட வேண்டும். தமிழகத்தில் வருவாய் கிராமங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வற்புறுத்துவதால் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள், மாற்றுத்திறனாளி கிராம நிர்வாக அலுவலர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி நேற்று(செப்.19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.