திருத்தணி அரசு மருத்துவமனையில் உதவி துணை இயக்குனர்

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ளது அரசு மருத்துவமனையில்
திடீர் ஆய்வு மேற்கொண்டார் உதவி துணை இயக்குனர் டாக்டர் கண்ணகி, இந்த ஆய்வின் போது மருத்துவமனை நுழைவாயில் முன்பு குடிதண்ணீர் இருக்கும் பகுதியில் தூய்மை இல்லாமல் உள்ளது மருத்துவமனை தரைத்தளம் தூய்மையாக பணிகளை மேற்கொள்ளவில்லை
வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் வெகுநேரமாக எப்படி இவர்கள் நின்று கொண்டு இருப்பது இவர்களுக்கு நாற்காலிகளை ஏற்பாடு செய்யவில்லை உடனடியாக அவர்களுக்கு நாற்காலி ஏற்பாடு செய்யுங்கள் என்று மருத்துவர் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார்
மேலும் மருத்துவமனை செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை யாரும் அடையாள அட்டை அணிய மாட்டீர்களா என மருத்துவர்களை கடுமையாக கண்டித்தார் நோயாளிகளிடம் இன்முகத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கினார்
மருத்துவமனை உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகள் படுக்கை அறைகள் கிழிந்த மெத்தை விரிப்பான் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இப்படியும் நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்தை எப்படி நடத்துகிறீர்கள் என்று கடுமையாக மருத்துவமனை நிர்வாகத்தை எச்சரித்தார் மேலும் இந்த ஆய்வில் கர்ப்பிணி தாய்மார்கள் கண் சிகிச்சை பெற வந்தவர்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று நோயாளிகளிடம் மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி