அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் சாவு

81பார்த்தது
அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் சாவு
சேலத்தைச் சேர்ந்தவர் மகாதிர் மகமுத் (35). சொந்தமாக ஜிம் வைத்து இருந்தார். தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று மாலை ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் அங்குள்ள குளியல் அறையில் குளித்தார். வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. அங்கிருந்தவர்கள் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தபோது தலை மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் அசைவின்றி கிடந்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி