திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா பள்ளிகளுக்கு இன்று (நவ.05) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.