திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய பெருமாள் மகன் சரவெடி சரத் என்கின்ற (எ) சரத்குமார் (28) இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சரத்குமார் சிறுமியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் வழக்குப்பதிவு செய்த வழக்கு காவல் ஆய்வாளர் மலர்விழி தலைமறைவாக இருந்த சரவெடி என்கின்ற சரத்குமாரை போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.