பூவிருந்தவல்லி - Poovirunthavalli

திருவள்ளூர்: கடனை திருப்பி கொடுக்காத நபரை கடத்தி தாக்குதல்.. இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலில் கடன் வாங்கிக் கொண்டு திரும்ப தராத நபரை கடத்திச் சென்று தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் சென்னையில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். மதுரவாயலில் உள்ள ஆலப்பாக்கம் ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் 50, 000 ரூபாயை இவர் கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனில் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்த பாக்கியராஜ், மீதம் தொகையை தருவதாக கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் தனது மைத்துனர் பிச்சைமணி என்பவருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்த பாக்யராஜை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். ரஞ்சித் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். பணத்தை வேறொரு நபரிடம் இருந்து வாங்கிக் கொடுப்பதாக கூறி அங்கிருந்து தப்பி சென்ற பாக்கியராஜ், இதுதொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தாக்குதல் நடத்திய ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனர் பிச்சைமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் ரஞ்சித் என்பவர் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా