ஆட்டோ டிரைவரிடம் மொபைல் பறிக்க முயற்சி.

160பார்த்தது
ஆட்டோ டிரைவரிடம் மொபைல் பறிக்க முயற்சி.
பள்ளிப்பட்டு அடுத்த சூரராஜபட்டடை காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 36; ஆட்டோ ஓட்டுனர்.

நேற்று முன்தினம் காலை 10: 00 மணிக்கு கோவிந்தராஜ், அவரது நண்பர் அரி என்பவரை பள்ளிப்பட்டில் இருந்து கொளத்துாரில் உள்ள அவரது வீட்டில் விட்டு வருவதற்காக, பள்ளிப்பட்டில் இருந்து கொளத்துார் நோக்கி நகரி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

கொளத்துார் துணைமின் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, ஆட்டோவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில், முகத்தை மறைத்தபடி வந்த நபர், கோவிந்தராஜிடம் இருந்து மொபைல் போனை பறிக்க முயன்றார்.

ஆனால் கை நழுவி, மொபைல் போன் கீழே விழுந்தது. ஏமாற்றத்துடன் அந்த நபர் தப்பியோடினார்.

இதுகுறித்து கோவிந்தராஜ், பள்ளிப்பட்டு போலீசில் நேற்று புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி