தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள். சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை

80பார்த்தது
தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள். சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை சாலை வழியாக சாமந்திபுரம் பங்களா செல்லும் ஒன்றிய தார்ச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் இச்சாலை அருகே விவசாய நிலமும் உள்ளது. இந்நிலையில், ஏரிக்கரை தார்ச்சாலை முடிவு ‛பம்ப் அவுஸ்' பகுயில், மின்கம்பம் ஒன்று சாய்ந்துள்ளன.

மேலும் அந்த மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின்ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், விவசாய நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்வதற்கும் அச்சப்படுகின்றனர். தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க வேண்டும், கூடுதல் மின்கம்பம் அமைக்க வேண்டும் என பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி