தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை

71பார்த்தது
தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை
திருவள்ளூா் மாவட்டம், திருமழிசை, விச்சூா் தொழிற்பேட்டைகளில் கனமழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய பணிகள்தொடா்பாக தொழில் முனைவோா், அரசு அலுவலா்கள், நீா்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆட்சியா் த. பிரபு சங்கா் வியாழக்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை தடுக்க குறுகிய கால திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வெள்ள பாதிப்புகள் ஏற்பட காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அவறறை அமல்படுத்த உள்ளோம். கடந்த ஆண்டு பெய்த அதிக மழையைப் போல் நிகழாண்டு பெய்தாலும் அந்த தாக்கத்தை தடுக்க ஆலோசனை செய்துள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தொழிற்சாலைகளுக்கு அவா்களின் காப்பீட்டு திட்ட நிதிகளை பொறுத்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியை விட 5 மீட்டா் தாழ்வான பகுதியில் திருமழிசை தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதன் காரணமாக நீா்மட்டம் உயரும்போது தாமாகவே நிலத்தடி நீா் அதிகமாக இதுவும் ஒரு காரணமாகும். இதற்காக மழைநீா் வடிகால் கால்வாய்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை சீா்செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி