தேரடியில் சிக்னல் அமைக்க கோரிக்கை

67பார்த்தது
தேரடியில் சிக்னல் அமைக்க கோரிக்கை
போரூர் சாலை, குன்றத்துார்-பல்லாவரம் சாலை இணையும் பகுதியில், தேரடி சாலை உள்ளது. இந்த வழியே, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

குறுகலாக உள்ள இந்த சாலையில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தடுக்கவும், வாகனங்கள் சீராக செல்லவும் தானியங்கி சிக்னல் இல்லாததால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

காலை, மாலை 'பீக் ஹவர்ஸ்' மற்றும் சுப முகூர்த்த நாட்களில், வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு நெரிசல் அதிகரிக்கிறது.

எனவே, குன்றத்துார் தேரடியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, தானியங்கி சிக்னலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி