தேர்தலை புறக்கணித்த காட்டுப்பள்ளி குப்பம் கிராம மக்கள்

5158பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பள்ளி குப்பம் மீனவ கிராம மக்கள் எல்என்டி மற்றும் அதானி துறைமுகங்களில் பணி செய்து வருகின்றனர். தற்போது வரை நிரந்தர பணி மற்றும் ஊதியத்திற்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நாளான இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து இதுவரை காட்டுப்பள்ளி குப்பம் கிராம மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை. இதனால் 150 எண் கொண்ட வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராத நிலையில் ஊராட்சிக்குட்பட்ட மற்ற கிராம மக்களிடமும் காட்டுப் பள்ளிக்குப்பம் கிராம மக்கள் ஆதரவு கோரிய நிலையில் பெரும்பான்மையாக மற்ற வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி