கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கை தொடர்பாக எஸ்.எரிப்பாளையம் கிராம பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.ஏரிப்பாளைம் கிராமத்தில் சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமம் சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ளது. இதனால், அரசின் திட்டப்பணிகள் மற்றும் நல உதவிகள் கிடைப்பதில் எஸ்.எரிப்பாளையம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.