வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்.

555பார்த்தது
வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்.
திருவள்ளூர் மாவட்டம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன இதில் ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகள் செயல்பட்டு அதில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் இரண்டாவது நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக
600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில்
பழதினை சரி செய்யும் பணியில் அனல்மின் நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் துரிதமாக ஈடுபட்டு பழது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி