பொன்னேரியில் நில அளவை அலுவலர்கள் போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக நில அளவை பணி மற்றும் பல்வேறு பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அரசு தலையிட்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நில அளவை அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர்.