100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: சீர்வரிசை பொருட்கள்

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நூறு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில்
சமுதாய வளைகாப்பு நடைபெற்றது
இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு
சமுதாய வளைகாப்பினை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார் பின்னர் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் உணவு வழங்கினர் இதில்
சோழவரம் திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மீவே கருணாகரன்
முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது அலமாதி கிருஷ்ணா நகர் பகுதிமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி சட்டமன்ற உறுப்பினரிடம் ஒட்டு மொத்தமாக மனுக்களை பண்டல் போல் கட்டிக் கொண்டு வந்து அவரிடம் கோரிக்கை வைத்தனர். ஆட்சேபனை இல்லாத இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் உறுதி அளித்தார் முன்னதாக சமுதாய வளைகாப்பு நிகழ்வில் அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில்
திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட நிகழ்வில் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பை கண்டித்து திமுகவினர் பல்வேறு போராட்டம் நடத்தி வரும் சூழலில் மத்திய அரசின் போஷாக் அபியான் ஹிந்தி வாசகம்
வழக்கம்போல் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி