ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் சித்திரை தேரோட்டம்,

1105பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கண்ணனின் திருமேனி அழகில் மயங்கிய பேரரசன் கரிகால சோழன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டியதால் மன்னனின் பேரோடு தற்போது கரி கிருஷ்ணன் என அழைக்கப்படுகிறார் இங்குள்ள பெருமாள், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு பத்து நாள் பிரம்ம உற்சவம் நடைபெறுவது வழக்கம், அதன்படி கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் 5, ஆம் நாளான நேற்று முன்தினம் சிவபெருமானும், அவரது மைத்துணனமான மகா விஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்து பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது, இதன் தொடர்ச்சியாக 7, ஆம் நாளான இன்று கரி கிருஷ்ண பெருமாள் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு பவனரதம் எனும் திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்துருளி வீதி உலா புறப்பட அங்கு கூடியிருந்த பெரும் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தி பேருக்கில் தேரை முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கரி கருகிருஷ்ண பெருமாளுக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றன,

தொடர்புடைய செய்தி