திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது, 21 ஆம் ஆண்டு நடைபெறும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சியில் கிராமத்தைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்ட குழந்தை முதல் பெரியோர்கள் வரை கடந்த ஏழு தினங்களாக விரதம் இருந்து அலகுகுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் முத்து மாரியம்மன் திருக்கோவிலின் அறங்காவலர் வேலாயுதம் ஏற்பாட்டில் பூஜைகள் துவங்கி இருதயராஜ் தலைமையில் காலை முதல் உடல் முழுவதும் அலகுகுத்து, முதுகில் இளநீர் மற்றும் வாகனத்தை இழுத்துச் செல்லும் நேர்த்திக்கடன் ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலமானது முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இருந்து துவங்கி சிவன் கோயில் வீதி வழியாக கிராமத்தைச் சுற்றி வளம் வந்து இறுதியாக சிவன் கோவிலில் நேர்த்திக் கடனை முடித்தனர் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வாகனத்தின் மூலம் திருத்தணி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர் இதில் கார்த்திக், ஆறுமுகம், நிர்மல், வெங்கடேசன், முருகன், மாரி, நாகராஜ், சிலம்பு, சாந்த், ஜெகதீஷ், மனோவா, புருஷோத், உள்ளிட்ட திரளான கிராம பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.