வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள்.

58பார்த்தது
வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள்.
வளசரவாக்கம், அகத்தீஸ்வரர் கோவில் குளம் மற்றும் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை துார்வாரும் பணியில், அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், பொது நலச்சங்கங்கள், நீர்நிலை ஆர்வலர்கள், பொது மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ’களமிறங்குவோம் நமக்கு நாமே’ என, நம் நாளி தழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீர்நிலை குறித்த, விழிப்புணர்வு செய்திகளும், வெளி யிடப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், ஏரி, குளங்களை துார் வாரும் பணி களில், ஆர்வத்துடம் ஈடுபட்டு வருகின்றனர். வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள, அகத்தீஸ்வரர் கோவில் குளம், பல ஆண்டு களாக துார் வாரப்படாமல் வறண்டு காணப்பட்டது. குளத்தை துார் வாருவதுடன், கரையை பலப்படுத்தி, தண்ணீர் தேங்க வழி செய்ய, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், குளத்தை துார் வாரும் பணியில், பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி