பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் கைது

581பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சோமசுந்தரம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்றிருந்த பெண்ணை வழியாக வந்த எருமை மாடு ஒன்று குத்தி 500 மீட்டர் வரை இழுத்து சென்றது. இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தையல்கள் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தீவிர விசாரணையின் அடிப்படையில் கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கோடீஸ்வர ராவ் ஆந்திரா பகுதியில் இருந்து மாடுகளை வாங்கி வந்து கமிஷனுக்கு மாடுகளை விற்பனை செய்யும் விற்பனையாளர் எனவும் தெரிய வந்துள்ளது.

அன்றைய தினம் இதுபோன்று ஆந்திராவில் இருந்து வந்த மாடுகள் இறங்கி கொண்டிருக்கும் போது முட்டிய மாடு மட்டும் வாகனத்திலிருந்து இறக்கும்போது தப்பி சென்றதாகவும் அதனை விரட்டு சென்று பணியாளர்கள் பிடிக்க முற்பட்டபோது புது இடம் என்பதால் மிரண்டு போன எருமை அந்த பெண்ணை முட்டி தூக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி