குப்பை எரிப்பு சுவாச கோளாறால் பகுதி வாசிகள் அவதி

58பார்த்தது
குப்பை எரிப்பு சுவாச கோளாறால் பகுதி வாசிகள் அவதி
திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் சேகரித்து, மத்துார் கிராம நுழைவாயில் ரயில்வே பாலம் அருகே, சாலையோரம் கொட்டப்படுகிறது.

இந்த குப்பை கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிக்காமல், ஊராட்சி நிர்வாகம் தீ வைத்து எரித்து வருகிறது.

இதனால், அதிகளவில் புகை உருவாகி, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி வாசிகள் சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், குப்பை கழிவுகள் தரம்பிரித்து, உரம் தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் சாலையோரம் கொட்டி எரிக்கப்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் உரம் தயாரிக்கும் திட்டத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி