குண்டர் சட்டத்திற்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் ஒட்டப்பட்டது

57பார்த்தது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே நான்காம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா வைத்திருந்த குற்றம் உள்ளிட்ட சில வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பெண் காவலர்களை இழிவாக பேசியதாக அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் தற்போது மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரது வீட்டில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான அதிகாரப்பூர்வ நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் கள்ளச்சாராய குற்றவாளிகள், கணினி வெளிச்சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வன குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் குற்றங்கள், குடிசை பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள், காணொளி திருடர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் 1982 ஆம் ஆண்டு தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி