மாதவரம் அருகே ரூ.9 க்கு மூன்று துணிகள் குவிந்த கூட்டம்

575பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் அருகே கொளத்தூரில் புதிய துணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு ₹9க்கு மூன்று துணிகள் என்ற அறிவிப்பால் குறைந்த விலையில் துணிமணிகளை வாங்க ஆண்கள், பெண்கள் குவிந்தனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். பேப்பர் மில்ஸ் சாலையில் ரேட் ஸ்ட்ரீட் என்கின்ற புதிய ரெடிமேட் ஆடைகளுக்கான விற்பனையகம் துவக்கப்பட உள்ளது. இந்த புதிய விற்பனை கடையின் துவக்க நாளை முன்னிட்டு ரூபாய் 9க்கு மூன்று வகையான துணிமணிகள் கொடுக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் அந்த கடையின் முன்பு குவிந்தனர். இதனால் இந்த கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி