திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பாக்கம் கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட பொன்னியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலாம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு புதுப்பாக்கம் கிராம தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது, இன்று பத்தாம் நான்திருவிழாவில் அருமந்தைபஞ்சாயத்து தலைவர் விக்ரம் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த ஊர்வலத்தில் உடுக்கை சலங்கை தாரை தம்பட்டை சிலம்பம் சுற்றி சிறுவர்கள் நடனம் வான வேடிக்கைகள் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் வீடு வீடாகச் சென்ற போது அப்பகுதி கிராம மக்கள் ஊர்வலத்தில் வரும் பொன்னியம்மனுக்கு சாலையில் கட்டலிட்டு பல்வேறு பழங்கள் இனிப்புகள் படையல் இட்டனர்.
வீட்டில் சமைக்கப்பட்ட சாதம் பல்வேறு வகையான அசைவ உணவு மீன் வகைகள் போன்றதை அம்மனுக்கு படையல் இட்டு தீபார்த்தனை காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒவ்வொரு வீடுகளிலும் ஆடுகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் அருமந்தை ஒன்றிய கவுன்சிலர் மொழிஅரசி செல்வம் மற்றும் தொழிலதிபர் சுதாகர் தொழிலதிபர் தரணி உட்பட திரளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கிராம தெய்வம் பொன்னிஅம்மனைவழிபாடு நடத்தினர்.