திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை
அச்சம நாயுடு கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் தனியார் பள்ளியை போன்று புது பொலிவுடன் வண்ணம் தீட்டப்பட்டு தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் அவர்களின் முயற்சியால் பள்ளிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட
பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது
இன்று கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை தந்தனர் புதுப்பொலிவுடன் பள்ளி காட்சியளித்ததை கண்டு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவிகளுக்கு ரோஜா மலர் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர்